சாயர்புரத்தில் கொரோனா தடுப்பூசி முகாம்

சாயர்புரத்தில் கொரோனா தடுப்பூசி முகாம் நடந்தது.

Update: 2021-06-23 14:15 GMT
சாயர்புரம்:
தமிழக அரசின் இலவச கொேரானா தடுப்பூசி முகாம் சாயர்புரத்தில் நடந்தது. சாயர்புரம் சேகர குருவானவர் டேனியல் ஆரம்ப ஜெபம் செய்தார். தூத்துக்குடி தெற்கு மாவட்ட தி.மு.க. சிறுபான்மை பிரிவு துணை அமைப்பாளர் ராஜேஷ் ரவிச்சந்தர் முகாமை தொடங்கி வைத்தார். மாவட்ட தாய்-சேய் நல அலுவலர் ஜெசிமேரி, மருத்துவ அலுவலர் சவுமியா, கிராம சுகாதார செவிலியர்கள் பொதுமக்களுக்கு தடுப்பூசி போட்டனர். 
முகாமில் சாயர்புரம் நகர பஞ்சாயத்து நிர்வாக அதிகாரி சுப்பிரமணியன், சுகாதார மேற்பார்வையாளர் நித்தியகல்யாணி, மாவட்ட விவசாய தொழிலாளர் அணி துணை அமைப்பாளர் பாலமுருகன், நகர இளைஞரணி செயலாளர் கண்ணன், துணை செயலாளர் கிறிஸ்டோபர் உள்பட பலர் கலந்து கொண்டனர். 

மேலும் செய்திகள்