கும்மிடிப்பூண்டி அருகே பஸ்சில் கஞ்சா கடத்த முயன்ற 2 பேர் கைது
கும்மிடிப்பூண்டி அருகே பஸ்சில் கஞ்சா கடத்த முயன்ற 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
கும்மிடிப்பூண்டி,
திருவள்ளுர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த எளாவூரில் உள்ள நவீன ஒருங்கிணைந்த சோதனைச்சாவடியில் நேற்று போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.
அப்போது அந்த வழியாக வந்த தமிழக அரசு பஸ்சை அவர்கள் நிறுத்தி சோதனை செய்தனர். அந்த பஸ்சில் கஞ்சா கடத்தி வந்ததாக திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த கிருஷ்ணகுமார் (வயது 33), வேலூர் மாவட்டத்தை சேர்ந்த ஆனந்தன் (42) ஆகயோர் மீது பாதிரிவேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்களை கைது செய்தனர். கஞ்சா பொட்டலங்களையும் போலீசார் கைப்பற்றினர்.