நெல்லையில் தமிழ்புலிகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
நெல்லையில் தமிழ்புலிகள் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
நெல்லை:
நெல்லை கலெக்டர் அலுவலகம் முன்பு தமிழ்புலிகள் கட்சியினர் நேற்று திடீர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். தமிழ்புலிகள் கட்சியின் தேனி மேற்கு மாவட்ட துணைச்செயலாளர் திருநாவுக்கரசு கொலை சம்பவத்தை கண்டித்தும், குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தியும் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
நெல்லை மாவட்ட செயலாளர் தமிழரசு தலைமை தாங்கினார். இதில் நாங்குநேரி தொகுதி செயலாளர் காளிதாஸ், மாவட்ட கொள்கை பரப்பு செயலாளர் தலித் கண்ணன், நெல்லை செயலாளர் தங்கப்பாண்டி, தொகுதி செயலாளர் கோவிந்தன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். முடிவில் கோரிக்கைகளை வலியுறுத்தி கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.