ஊரடங்கை மீறி திறக்கப்பட்ட பேக்கரிக்கு `சீல்'

பாலத்துறை பகுதியில் ஊரடங்கை மீறி திறக்கப்பட்ட பேக்கரிக்கு அதிகாரிகள் `சீல்' வைத்தனர்.

Update: 2021-06-22 19:50 GMT
கரூர்
நொய்யல்
ஊரடங்கு
தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்ததன் காரணமாக தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. ஆனால், கரூரில் தொற்று இன்னும் கட்டுப்பாட்டுக்குள் வராததால் அத்தியாவசிய கடைகளை தவிர பிற கடைகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன.
 இந்தநிலையில் ஊரடங்கு உத்தரவை மீறி தவுட்டுப்பாளையம் அருகே பாலத்துறை நெடுஞ்சாலை ஓரத்தில் செயல்பட்டு வந்த பேக்கரி ஒன்று ஒருபுறமாக திறக்கப்பட்டு டீ மற்றும் இனிப்பு, காரம் ஆகிய தின்பண்டங்கள் விற்கப்படுவதாக அதிகாரிகளுக்கு புகார்கள் சென்றன.
பேக்கரிக்கு `சீல்’
பொதுமக்களின் புகாரின் அடிப்படையில் புகளூர் தாசில்தார் செந்தில் தலைமையில் மண்டல துணை தாசில்தார் ஜெகமணி, வருவாய் ஆய்வாளர் கற்பகவல்லி, கிராம நிர்வாக அலுவலர் வித்தியானந்தன் ஆகியோர் கொண்ட குழுவினர் சம்பந்தப்பட்ட இடத்திற்கு சென்றனர்.
அப்போது அங்குள்ள ஒரு பேக்கரி ஒருபுறமாக திறக்கப்பட்டு டீ மற்றும் தின்பண்டங்கள் விற்றது தெரிய வந்தது. அதன்பேரில், அந்த பேக்கரியை அதிகாரிகள் இழுத்து மூடி `சீல்' வைத்தனர். மேலும், ஊரடங்கு உத்தரவை மீறி பேக்கரியை திறந்து வியாபாரம் செய்ததற்காக ரூ.5 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது.

மேலும் செய்திகள்