செக்கானூரணி அருகே கிண்ணிமங்கலத்தைச் சேர்ந்த பிச்சை. இவரது மனைவி பாண்டியம்மாள் (வயது 75). இவர் கடந்த 15-ந்தேதி வீட்டில் இருந்து கடைக்கு சென்று வருவதாக கூறிச்சென்றவர் அதன் பிறகு வீடு திரும்பவில்லை. இதுகுறித்து பாண்டியம்மாளின் மகன் பாண்டி (50) கொடுத்த புகாரின் பேரில் செக்கானூரணி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர்.இந்நிலையில் மதுரை காமராஜர் பல்கலை எல்காட் வளாகம் அருகே புதரில் பெண் பிணம் கிடப்பதாக வந்த தகவலின் பேரில் அங்கு சென்ற நாகமலைபுதுக்கோட்டை போலீசார் பிணத்தை கைப்பற்றி விசாரித்தனர். விசாரணையில் அவர் செக்கானூரணி அருகே காணாமல் போன பாண்டியம்மாள் என்பது தெரியவந்தது. இதையடுத்து பிணத்தை மதுரை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.