சிவன் கோவில்களில் பிரதோஷ சிறப்பு பூஜை
சிவன் கோவில்களில் பிரதோஷத்தை முன்னிட்டு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது.;
கொள்ளிடம் டோல்கேட்,
திருச்சி நம்பர் 1 டோல்கேட் அருகே உள்ள உத்தமர் கோவிலில் பிரதோஷத்தை முன்னிட்டு நந்தி பகவானுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடைபெற்றது. முன்னதாக நந்தி பகவானுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் நடைபெற்று பஞ்சமுக தீபாராதனை காண்பிக்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து மூலவர் பிச்சாண்டேஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் மகாதீபாராதனை நடைபெற்றது. இதனையடுத்து சவுந்தர்யபார்வதி உடனுறை பிச்சாண்டேஸ்வரர் நந்தி வாகனத்தில் புறப்பாடு கண்டு கோவில் பிரகாரத்தை வலம்வந்து மூலஸ்தானத்தை சென்றடைந்தார்.
இதேபோன்று திருவாசி மாற்றுரைவரதீஸ்வரர் கோவில், பனமங்கலம் வாரணபுரீஸ்வரர் கோவில், உத்தமர்சீலி அருகே திருப்பால்துறை ஆதிமூலேஸ்வரர், சமயபுரம் போஜீஸ்வரர் கோவில், மண்ணச்சநல்லூர் பூமிநாதசுவாமி கோவில், ஏகாம்பரநாதர் கோவில், திருப்பட்டூர் பிரம்மபுரீஸ்வரர் கோவில், உப்பிலியபுரம் அருகே ரெட்டியாப்பட்டியில் ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரர் கோவில், கொப்பம்பட்டி ஸ்ரீசப்தரீஸ்வரர் கோவில், தெற்கு விஸ்வாம்பாள் சமுத்திரம் காசிவிஸ்வநாதர் கோவில் உள்ளிட்ட சிவன் கோவில்களில் பிரதோஷத்தை முன்னிட்டு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது. கொரோனா தடை உத்தரவு காரணமாக பக்தர்கள் பூஜையில் கலந்து கொள்ள அனுமதிக்கப்படவில்லை.