சோதனை சாவடிகளில் உணவு கடத்தல் தடுப்புப்பிரிவு போலீஸ் சூப்பிரண்டு ஆய்வு

சோதனை சாவடிகளில் உணவு கடத்தல் தடுப்புப்பிரிவு போலீஸ் சூப்பிரண்டு ஆய்வு

Update: 2021-06-22 18:49 GMT
பொள்ளாச்சி

தமிழகத்தில் உள்ள ரேஷன் கடைகளில் வழங்கப்படும் விலையில்லா ரேஷன் அரிசியை பொதுமக்களிடம் இருந்து குறைந்த விலைக்கு கடத்தல்காரர்கள் வாங்குகின்றனர். 

பின்னர் அந்த அரிசியை கேரளாவில் அதிக விலைக்கு விற்பனை செய்கின்றனர். இதை தடுக்க தமிழக-கேரள எல்லையில் சோதனை சாவடி அமைத்து கண்காணிக்கப்படுகிறது.

இந்த நிலையில் உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் சூப்பிரண்டு ஸ்டாலின்  தமிழக-கேரள எல்லைகளில் உள்ள சோதனை சாவடியில் ஆய்வு செய்தார். 

கோவை அருகே உள்ள வாளையாறு, வேலாந்தவளம், பொள்ளாச்சி பகுதிகளில் உள்ள மீனாட்சிபுரம், கோவிந்தாபுரம், செமனாம்பதி ஆகிய சோதனை சாவடிகளில் ஆய்வு நடத்தப்பட்டது. 

அப்போது அவர் ரேஷன் அரிசி கடத்தலை தடுக்க கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும். ரேஷன் அரிசி கடத்துவோரை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என்று போலீசாருக்கு உத்தரவிட்டார்.

 ஆய்வின் போது இன்ஸ்பெக்டர், சப்-இன்ஸ்பெக்டர்கள் மற்றும் போலீசார் உடன் இருந்தனர்.

மேலும் செய்திகள்