கொரோனா நோயாளிகளுக்கு யோகா பயிற்சி

பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரியில் கொரோனா நோயாளிகளுக்கு யோகா பயிற்சி அளிக்கப்பட்டது.

Update: 2021-06-22 18:31 GMT
பொள்ளாச்சி

பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரியில் கொரோனா நோயாளிகளுக்கு யோகா பயிற்சி அளிக்கப்பட்டது.

யோகா பயிற்சி

பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்தியில் சர்வதேச யோகா தினம் கடைபிடிக்கப்பட்டது. இதையொட்டி வார்டில் சிகிச்சை பெற்று வரும் கொரோனா நோயாளிகளுக்கு யோகா பயிற்சி அளிக்கப்பட்டது. 

யோகா டாக்டர் அர்ச்சனா தலைமை தாங்கி, யோகா பயிற்சி அளித்தார். மேலும் சிகிச்சையாளர்கள் தங்கதுரை, ஷாலினி ஆகியோர் கலந்துகொண்டு நோயாளிகளுக்கு பயிற்சி அளித்தனர். 

இதுகுறித்து யோகா டாக்டர்கள் கூறியதாவது:-

கொரோனா நோயாளிகள் மன ரீதியாக பாதிக்கப்படுகின்றனர். கோவையில் கொரோனா நோயாளிகள் தற்கொலை செய்து கொண்டு உள்ளனர். மேலும் பல்வேறு பகுதிகளில் தற்கொலைக்கு முயன்றதாக கூறப்படுகிறது. 

இதன் காரணமாக கொரோ னா நோயால் பாதிக்கப் பட்ட நபர்களுக்கு மன அழுத்தத்தை போக்குவதற்கு யோகா பயிற்சி அளிக்கப்பட்டது.

மன அழுத்தம்

கொரோனா நோயாளிகள் ஆக்சிஜன் குறைவதால் மூச்சு விடுவதற்கு மிகவும் சிரமப்படுகின்றனர். இதன் காரணமாக ஆசனம், சுவாச பயிற்சிகள் மற்றும் பிராணயாமா உள்ளிட்ட பயிற்சிகள் அளிக்கப் பட்டன. 

இதன் மூலம் நோயாளியின் சுவாச திறன் அதிகரிக்கும். மன அழுத்தம் காரணமாக தூங்க முடியாத நிலை ஏற்படுகிறது. யோகா மூலம் மன அழுத்தம் நீங்கி, நல்ல தூக்கம் ஏற்படும்.

நோயாளிகள் தினமும் 2 முறை வீட்டில் யோகா பயிற்சி செய்ய வேண்டும். அதாவது 15 முதல் 30 நிமிடங்கள் யோகா செய்தால் போதும். வீட்டில் இருந்தே பயிற்சிகளை மேற்கொள்ளலாம். 

சர்வதேச யோகா தினத்தை நினைவுப்படுத்தும் வகையில் கொரோனா நோயாளிகளுக்கு யோகா பயிற்சி அளிக்கப்பட்டது. 

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

மேலும் செய்திகள்