ஜவுளி கடைகளுக்கு சீல்

ஊரடங்கை மீறி திறந்திருந்த ஜவுளி கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டது.

Update: 2021-06-22 18:25 GMT
தேவகோட்டை,ஜூன்
தேவகோட்டையில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன், வட்டாட்சியர் ராஜரத்தினம் ஆகியோர் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக ஆய்வுப்பணியில் ஈடுபட்டனர். அப்போது திருப்பத்தூர் சாலை, வாடியார் வீதி, பஸ் நிலையம் பின்புறம் போன்ற முக்கிய பகுதிகளில் ஜவுளி கடைகளை  திறந்து வியாபாரம் செய்தனர். இதைத் தொடர்ந்து அதிகாரிகள் 4 ஜவுளி கடைகளுக்கும் சீல் வைத்தனர். தற்போது கொரோனா 3-வது அலை ஏற்படும் சூழ்நிலையில் பொதுமக்கள் தங்களது குழந்தைகளை வெளியே அழைத்து வர வேண்டாம் என இன்ஸ்பெக்டர் அறிவுரை வழங்கினார். மேலும் சீல் வைக்கப்பட்ட கடைகளின் உரிமையாளர்கள் 48 மணி நேரத்திற்குள் அபராத தொகையை செலுத்த வேண்டும். இல்லையென்றால் கடை உரிமம் ரத்து செய்யப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்