குடி போதையில் ஆட்டோ ஓட்டியவரை போலீசில் ஒப்படைத்த துணை தாசில்தார்

குடி போதையில் ஆட்டோ ஓட்டியவரை துணை தாசில்தார் பிடித்து போலீசில் ஒப்படைத்தார்.

Update: 2021-06-22 17:50 GMT
கீழக்கரை,ஜூன்.
கீழக்கரையில் துணை தாசில்தார் பரணிகுமார் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக வாகனத்தில் சென்று ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது கீழக்கரை முக்கு ரோடு அருகில் ஆட்டோ ஒன்று நிலை தடுமாறி வந்தது. உடனடியாக அவர் அந்த ஆட்டோவை நிறுத்தி ஓட்டுனரிடம் விசாரித்தார். அப்போது அவர் மது அருந்திவிட்டு ஆட்டோ ஓட்டியது தெரிய வந்தது. மேலும் அவரிடம் 5 மது பாட்டில்களும் இருந்தன. உடனே அந்த ஆட்டோ ஓட்டுனரை தனது ஜீப்பில் ஏற்றி சென்று கீழக்கரை போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தார். இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் ஆட்டோவை பறிமுதல் செய்து ஓட்டுனர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.

மேலும் செய்திகள்