ஊரடங்கை மீறி திறந்த கடைகளுக்கு ரூ.18 ஆயிரம் அபராதம்

ஊரடங்கை மீறி திறந்த கடைகளுக்கு ரூ.18 ஆயிரம் அபராதம்.

Update: 2021-06-22 17:38 GMT
புதுக்கோட்டை,

தமிழகத்தில் கொரோனா ஊரடங்கில் அறிவிக்கப்பட்ட தளர்வுகள் புதுக்கோட்டை மாவட்டத்தில் நேற்று முன்தினம் முதல் அமலுக்கு வந்தன. இந்த நிலையில் அனுமதிக்கப்பட்ட கடைகளை தவிர வேறு கடைகள் திறக்கப்பட்டுள்ளதா? என புதுக்கோட்டை நகர கடைவீதியில் நகராட்சி அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது ஊரடங்கில் அனுமதிக்கப்படாத ஜவுளி கடைகள், நகைக்கடைகள் திறந்திருந்ததை அதிகாரிகள் கண்டுபிடித்தனர். இந்த ஆய்வின் போது ஊரடங்கை மீறி திறந்த கடைகளுக்கு அபராதம் விதித்து ரூ.18 ஆயிரம் வசூலித்தனர்.

மேலும் செய்திகள்