மேகதாதுவில் அணைக்கட்டுவதற்கு எதிர்ப்பு கருப்பு கொடி ஏந்தி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

மேகதாதுவில் அணைக்கட்டுவதற்கு எதிர்ப்பு தொிவித்து கருப்பு கொடி ஏந்தி விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

Update: 2021-06-22 17:27 GMT

காட்டுமன்னார்கோவில், ஜூன்.23-
காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவில் கர்நாடக அரசு அணை கட்டுவதற்கு முயற்சி செய்து வருகிறது. இதற்கு தமிழகத்தில் இருந்து கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வருகிறது.
 இந்த நிலையில் காவிரியின் கடைமடை பகுதியாக இருக்கும் கொள்ளிடம் கீழணை பாசன விவசாயிகள் சங்கம் சார்பில் காட்டுமன்னார்கோவிலில்  பஸ் நிலையம் முன்பு விவசாயிகள் கையில் கருப்பு கொடி ஏந்தி  கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கு சங்கத் தலைவர் விநாயகமூர்த்தி தலைமை தாங்கினார். 
மேகதாதுவில் கர்நாடக அரசு அணை கட்ட முயற்சி செய்வதை கைவிட வேண்டும், அணைக்கட்டுவதற்கு மத்திய அரசு அனுமதி அளித்திட கூடாது என்பதை வலியுறுத்தி விவசாயிகள் கண்டன கோஷங்களை எழுப்பினர்.
இதில்  செயலாளர் அன்பழகன், பொருளாளர் லட்சுமிகாந்தன், துணை தலைவர் நஜிமுதீன், நிர்வாகிகள் முத்துராமலிங்கம், பன்னீர்செல்வம், குமரேசன், செந்தமிழ்செல்வன், பாலமுருகன், ஜெயராமன் உள்பட 20-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டு கண்டன கோஷங்களை எழுப்பினர்.

மேலும் செய்திகள்