குறித்த காலத்துக்குள் சான்றிதழ்களை வழங்க வேண்டும். கலெக்டர் அமர் குஷ்வாஹா உத்தரவு
குறித்த காலத்துக்குள், பொதுமக்களுக்கு சான்றிதழ்களை வழங்க வேண்டும் என கலெக்டர் அமர் குஷ்வாஹா, அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.;
வாணியம்பாடி-
ஜமாபந்தி
வாணியம்பாடி தாலுகா அலுவலகத்தில் நேற்று ஜமாபந்தி தொடங்கியது. மாவட்ட கலெக்டர் அமர் குஷ்வாஹா தலைமை தாங்கி முதலில் அலுவலக வளாகத்தில் மரக்கன்று நட்டார். தற்போது கொரோனா தடுப்பு ஊரடங்கு காலம் என்பதால் பொதுமக்கள் ஆன்லைன் வழியாக தங்களது குறைகளை மனுக்களாக அனுப்ப அறிவுறுத்தப்பட்டிருந்தது.நேரடியாக மனுக்கள் பெறப்படுவதில்லை.
வாணியம்பாடி தாலுகாவிலுள்ள 41 வருவாய் கிராமத்திற்க்கான கணக்குகள் இந்த ஜமாபந்தியில் தணிக்கை செய்யப்படுகிறது. நாளை (வியாழக்கிழமை) வரை நடைபெறும் ஜமாபந்தியின் தொடக்க நிகழ்ச்சி நேற்று நடந்தது.
சான்றிதழ் வழங்க வேண்டும்
முதல்நாளான நேற்று கலெக்டர் அமர் குஷ்வாஹா கலந்துகொண்டு கணக்குகளை தணிக்கை செய்தார். அப்போது அனைத்து சான்றுகளும் நிலுவையில்லாமல் பொதுமக்களுக்கு குறித்த காலத்திற்குள் வழங்கி முடிக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். ஜமாபந்தியில் வாணியம்பாடி தாசில்தார் மற்றும் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.