870 பேருக்கு கொரோனா 19 பேர் பலி

870 பேருக்கு கொரோனா 19 பேர் பலி

Update: 2021-06-22 16:53 GMT
கொரோனா
கோவை


கோவை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா தினசரி நோய்த் தொற்று குறைந்து வருகிறது.

 நேற்று அரசு மருத்துவமனைகள், தனியார் மருத்துவமனைகள், கொரோனா சிகிச்சை மையங்களில் சிகிச்சை பெற்று வந்த 2,046 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். 

இதன் மூலம் மாவட்டத்தில் இதுவரை 2 லட்சத்து 3 ஆயிரத்து 953 பேர் தொற்றில் இருந்து குணமடைந்துள்ளனர்.

கோவையில் நேற்று மேலும் புதிதாக 870 பேருக்கு கொரோனா நோய்த் தொற்று உறுதியானது. இதன் மூலம் மாவட்டத்தில் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2 லட்சத்து 14 ஆயிரத்து 256 ஆக உயர்ந்துள்ளது.

கோவை அரசு மருத்துவமனைகள், தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த 19 பேர் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்துள்ளனர். 

இதன் மூலம் கோவையில் தொற்றுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 1,930 ஆக உயர்ந்துள்ளது. தற்போது 8 ஆயிரத்து 373 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

மேலும் செய்திகள்