நீலகிரியில் 139 பேருக்கு கொரோனா தொற்று
நீலகிரியில் 139 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
ஊட்டி
நீலகிரி மாவட்டத்தில் நேற்று புதிதாக 139 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதியானது. இதனால் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 27 ஆயிரத்து 464 ஆக உயர்ந்து உள்ளது. 381 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பினர். இதுவரை 25 ஆயிரத்து 921 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
தொற்று பாதித்து சிகிச்சை பெற்று வந்த 2 பேர் இறந்தனர். இதன் மூலம் இதுவரை கொரோனாவால் இறந்தவர்கள் எண்ணிக்கை 152 ஆக உயர்ந்துள்ளது. தற்போது 1,391 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.