ஊட்டியில் குழந்தைகள் சிறப்பு வார்டில் கலெக்டர் ஆய்வு
ஊட்டியில் குழந்தைகள் சிறப்பு வார்டில் கலெக்டர் ஆய்வு செய்தார்.;
ஊட்டி
நீலகிரி மாவட்டத்தில் கொரோனா 3-வது அலையை எதிர்கொள்ளவும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகவும் குழந்தைகளுக்கான சிறப்பு வார்டு ஊட்டி சிறுவர் மன்றத்தில் அமைக்கப்பட்டு உள்ளது.
இந்த நிலையில் கலெக்டர் இன்னசென்ட் திவ்யா ஊட்டி சிறுவர் மன்றத்தில் அமைக்கப்பட்ட குழந்தைகள் சிறப்பு வார்டில் படுக்கை வசதிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
சிறப்பு வார்டு கிருமிநாசினி தெளித்து சுத்தம் செய்யப்பட்டு உள்ளதா, தற்காலிக கழிப்பறைகள் அமைக்கப்பட்டு இருக்கிறதா என்று ஆய்வு மேற்கொண்டார். இங்கு சிகிச்சை அளிக்க அனைத்து மருத்துவ வசதிகளும் ஏற்படுத்த வேண்டும் என்று அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
ஊட்டி அரசு தலைமை ஆஸ்பத்திரியில் 25 படுக்கைள், சிறுவர் மன்றத்தில் 100 படுக்கைகள், அரசு மகப்பேறு ஆஸ்பத்திரி பச்சிளம் குழந்தைகள் பிரிவில் 10 படுக்கைகள் என மொத்தம் 135 படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்பட்டு இருக்கிறது. இந்த ஆய்வின்போது ஊட்டி தாசில்தார் குப்புராஜ் உடனிருந்தார்.