விளாத்திகுளம் தாலுகா அலுவலகத்தில் ஜமாபந்தி
விளாத்திகுளம் தாலுகா அலுவலகத்தில் ஜமாபந்தி நடந்தது
விளாத்திகுளம்:
விளாத்திகுளம் தாலுகா அலுவலகத்தில் ஜமாபந்தி தொடங்கியது. வருகிற 30-ந் தேதி வரை நடக்கிறது.
ஜமாபந்தி
விளாத்திகுளம் தாலுகா அலுவலகத்தில் நேற்று ஜமாபந்தி தொடக்க நிகழ்ச்சி நடந்தது. இந்த நிகழ்ச்சிக்கு தூத்துக்குடி மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணபிரான் தலைமை வகித்து, பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட மனுக்களை பரிசீலனை செய்தார். விளாத்திகுளம் தாசில்தார் ரகுபதி முன்னிலை வகித்தார்.
புதூர் குறுவட்டத்திற்கு உட்பட்ட முத்துசாமிபுரம், கவுண்டன்பட்டி, மெட்டில்பட்டி, சிவலாா்பட்டி, வன்னிப்பட்டி, செங்கோட்டை, பட்டிதேவன்பட்டி, குமாரசித்தன்பட்டி, மணியகாரன்பட்டி சென்னம்பட்டி, வௌவால்தொத்தி உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த வருவாய் கணக்கு தணிக்கை செய்யப்பட்டது.
51 மனுக்கள்
மேலும் சம்பந்தப்பட்ட கிராமங்களிலிருந்து பட்டா மாறுதல், ஆக்கிரமிப்புகளை அகற்றுதல் உட்பட மொத்தம் 51 கோரிக்கை மனுக்கள் இணையதளம் மூலம் பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்டது.
மேலும் பெறப்பட்ட மனுக்களை விரைவில் ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு மாவட்ட வருவாய் அதிகாரி உத்தரவிட்டார்.
இந்த மனுக்கள் மீது அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்த நிகழ்ச்சியில் சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் பாஸ்கரன், மண்டல துணை தாசில்தார்கள் அப்பனராஜ், ராமகிருஷ்ணன், தலைமையிடத்து துணை தாசில்தார் சரவணபெருமாள், வட்ட வழங்கல் அலுவலர் பாலமுருகன் உட்பட சம்பந்தப்பட்ட கிராம வருவாய் ஆய்வாளர்கள் மற்றும் கிராம நிர்வாக அலுவலர்கள், கிராம உதவியாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.