7-வது சர்வதேச யோகா தினம் கடைபிடிப்பு
7-வது சர்வதேச யோகா தினம் கடைபிடிப்பு.
சென்னை,
உடலுக்கு ஆரோக்கியம் சேர்க்கும் வகையில் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் இந்தியாவில் தோன்றிய யோகா கலை, தற்போது உலகமெங்கும் பரவி கிடக்கிறது. கடந்த 2014-ம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் 21-ந்தேதி சர்வதேச யோகா தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. அந்தவகையில் நேற்று 7-வது உலக யோகா தினம் நாடு முழுவதும் கடைப்பிடிக்கப்பட்டது. சென்னை எழும்பூர் குழந்தைகள் நல ஆஸ்பத்திரியில் நடந்த சர்வதேச யோகா தினத்தை மருத்துவமனை இயக்குனர் டாக்டர் எழிலரசி தொடங்கி வைத்தார்.
பின்னர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் குழந்தைகள் மற்றும் அவர்களின் தாய்மார்களுக்கு யோகா மற்றும் இயற்கை மருத்துவத்துறை மருத்துவ அதிகாரி டாக்டர் லதா, யோகாசனங்களை செய்து காண்பித்து, அதனால் உண்டாகும் உடல் ஆரோக்கியத்தை குறித்து விளக்கி, அவர்களையும் யோகாசனம் செய்ய வைத்தார். இதையடுத்து, அனைவருக்கும் இயற்கை மருத்துவ குணம் அடங்கிய உணவுகள் வழங்கப்பட்டது. இந்தநிகழ்ச்சியில் மருத்துவமனை மக்கள் தொடர்பு அதிகாரி கங்காதரன் உள்ளிட்ட டாக்டர்கள் பலர் கலந்து கொண்டனர்.
இதேபோல், சென்னை எழும்பூர் ரெயில் நிலையத்திலும், ரெயில்வே ஊழியர்கள் மற்றும் ரெயில்வே பாதுகாப்புப்படை சார்பில் சர்வதேச யோகா தினம் கடைப்பிடிக்கப்பட்டது. ரெயில் நிலைய நடைமேடையில் வைத்து நடைபெற்ற நிகழ்ச்சியில், ரெயில்வே ஊழியர்களும், ரெயில்வே பாதுகாப்புப்படையினரும் யோகாசனங்களை செய்தனர். இந்தநிகழ்ச்சியில் ரெயில் நிலைய இயக்குனர் ஜெய வெங்கடேசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.