விவசாயி தற்கொலை

செங்கோட்டை அருகே விவசாயி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2021-06-21 21:03 GMT
செங்கோட்டை:
செங்கோட்டை அருகே விஸ்வநாதபுரம் அம்பேத்கர் தெருவை சேர்ந்த கணேசன் (வயது 48). விவசாயி. இவருக்கு நோய் இருந்து வந்தது. இதுசம்பந்தமாக அவருக்கு திருவனந்தபுரம் மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்வதற்காக ஏற்பாடு நடந்து வந்தது. இந்த நிலையில் கணேசன் அறுவை சிகிச்சைக்கு பயந்து வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுபற்றி தகவல் கிடைத்ததும் செங்கோட்டை போலீசார் விரைந்து சென்று கணேசன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்