ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் பெரியாழ்வார் திருநட்சத்திர விழா

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் பெரியாழ்வார் திருநட்சத்திர விழா நடைபெற்றது.;

Update: 2021-06-21 20:25 GMT
திருச்சி
ஸ்ரீரங்கம்
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் நேற்று பெரியாழ்வார் திருநட்சத்திரம் வைபவம் நடந்தது. பன்னிரு ஆழ்வார்களில் ஒருவரும், ஆண்டாள் தந்தையுமான பெரியாழ்வாரின் ஜென்ம நட்சத்திரமான (ஆனி-சுவாதி) நேற்று கோவில் வளாகத்தில் உள்ள பெரியாழ்வார் சன்னதியில் பெரியாழ்வாருக்கு சிறப்பு அலங்காரம் மற்றும் பூஜைகள் நடைபெற்றன. பின்னர் அங்கிருந்து புறப்பட்ட பெரியாழ்வார் ரெங்கநாதர் மூலஸ்தனம் எதிரே உள்ள சந்தனு மண்டபத்திற்கு சென்றார். அங்கு பெரியாழ்வாருக்கு மரியாதை செய்யப்பட்டது. பின்னர் அங்கிருந்து புறப்பட்டு கோவில் வளாகத்தில் வலம் வந்து சன்னதியை வந்தடைந்தார். விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் இணை ஆணையர் மாரிமுத்து, அர்ச்சகர் சுந்தர்பட்டர் மற்றும் ஊழியர்கள் செய்திருந்தனர்.

மேலும் செய்திகள்