திருச்சி மலைக்கோட்டை முன்பு இந்து மக்கள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

திருச்சி மலைக்கோட்டை முன்பு இந்து மக்கள் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.;

Update: 2021-06-21 20:16 GMT
திருச்சி
மலைக்கோட்டை
கொரோனா வைரஸ் தொற்று காரணமாக தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. பொதுமக்களின் நலன்கருதி மளிகை கடைகள், டீக் கடைகள், பழக்கடைகள் உள்ளிட்ட அத்தியாவசிய கடைகளை மட்டும் திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. வழிபாட்டு தலங்களை திறக்க அனுமதிக்கப்படவில்லை. இந்தநிலையில் கோவில்களை திறக்கக்கோரி திருச்சி மலைக்கோட்டை தாயுமான சுவாமி கோவில் மாணிக்க விநாயகர் கோவில் நுழைவு வாயில் முன்பாக இந்து மக்கள் கட்சியினர் நேற்று காலை 1 கிலோ சூடம் ஏற்றியும், தேங்காய் பழம் வைத்து, பூ போட்டு வழிபாடு நடத்தினர். பின்னர், டாஸ்மாக் கடையை திறந்த அரசு, ஏன் கோவில்களை திறக்கக் கூடாது என்று கூறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு மாநில செயலாளர் ஸ்ரீராம் தலைமை தாங்கினார். மாநில துணைத் தலைவர் மாரி முன்னிலை வகித்தார். ஆர்ப்பாட்டத்தின் நோக்கம் குறித்து மாநில செயலாளர் ஸ்ரீராம் கூறுகையில், கோவில்களுக்கு சென்று வருவதன் மூலம் மக்களின் மன அழுத்தம் குறையும். அதற்கு முக்கியத்துவம் தராமல் டாஸ்மாக் கடைகளுக்கு தமிழக அரசு முக்கியத்துவம் தந்து கடைகளை திறந்து உள்ளது. இந்த விவகாரத்தில் அரசு நல்ல முடிவை எடுக்க வேண்டும் என்று கூறினார்.

மேலும் செய்திகள்