தரைக்கடைகளை திறக்க அனுமதி கோரி வியாபாரிகள் ஆர்ப்பாட்டம்

தரைக்கடைகளை திறக்க அனுமதி கோரி வியாபாரிகள் ஆர்ப்பாட்டம்

Update: 2021-06-21 20:11 GMT
திருச்சி
திருச்சி
திருச்சி மாவட்ட தரைக்கடை, சிறுகடை வியாபாரிகள் சங்கம் (ஏ.ஐ.டி.யூ.சி) சார்பில் திருச்சி கலெக்டர் அலுவலகம் அருகே நேற்று காலை கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட தலைவர் சிவா தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சங்கத்தின் செயலாளர் அன்சர்தீன், பொருளாளர் பிரகாஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர். திருச்சி தெப்பக்குளம், என்.எஸ்.பி.ரோடு, நந்திகோவில்தெரு உள்ளிட்ட இதர பஜார் பகுதிகளில் பல ஆண்டுகளாக தரைக்கடை மற்றும் சிறு கடைகளை  நடத்தி வருகிறோம். கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த 40 நாட்களுக்கு மேல் வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வருகிறோம். தற்போது தமிழக அரசு ஊரடங்கில் இருந்து தளர்வுகள் அறிவித்துள்ள நிலையில், தரைக் கடைகளையும் சமூக இடைவெளியுடன் முககவசம் அணிந்து வியாபாரம் நடத்த அனுமதி அளிக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மேலும் செய்திகள்