இளையான்குடி ஒன்றியக்குழு கூட்டத்தில்-சுகாதாரத்துறை, மின்துறை, குடிநீர் வாரிய அதிகாரிகள் பங்கேற்க நடவடிக்கை
இளையான்குடி ஒன்றியக்குழு கூட்டத்தில் சுகாதாரத்துறை, மின்துறை, குடிநீர் வாரிய அதிகாரிகள் பங்கேற்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஒன்றிய குழு தலைவர் உறுதி அளித்தார்.
இளையான்குடி,
இளையான்குடி ஒன்றியக்குழு கூட்டத்தில் சுகாதாரத்துறை, மின்துறை, குடிநீர் வாரிய அதிகாரிகள் பங்கேற்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஒன்றிய குழு தலைவர் உறுதி அளித்தார்.
ஒன்றியக்குழு கூட்டம்
கூட்டத்தில் வரவு-செலவு கணக்குகள் சமர்ப்பிக்கப்பட்டன. ஒன்றிய கவுன்சிலர் முருகானந்தம் (தி.மு.க) பேசியபோது, அலுவலகப்பணி, சம்பளம் போன்ற நிதி செலவினங்கள் தவிர மற்றவை அனைத்தும் ஒன்றியக்குழு உறுப்பினர்களின் ஒப்புதலின்றி செலவு செய்யக்கூடாது. பொது நிதி வேலைகளை ஏற்கனவே உள்ள ஒப்பந்ததாரர்கள் மட்டுமே செய்ய வேண்டும். மற்ற தாலுகா ஒப்பந்ததாரர்களை அனுமதிக்கக்கூடாது என்றார்.
கழிவுநீர் வடிகால் வசதி
ஒன்றிய கவுன்சிலர் கீர்த்தனா கனகராஜ் (அ.தி.மு.க) பேசியபோது, மேலாயூர் கிராமத்திற்கு கழிவுநீர் வடிகால் வசதி அமைத்துத்தர கோரிக்கை விடுத்தார்.
இதற்கு பதில் அளித்து ஒன்றிய சேர்மன் முனியாண்டி பேசியதாவது:-
நடவடிக்கை
ஆணையாளர் ஸ்ரீதர் பதிலுரை அளித்தபோது அனைத்து துறை அதிகாரிகளும் பேரவை கூட்டத்தில் கலந்து கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார். முடிவில் வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜேஸ்வரி (கிராம ஊராட்சி) நன்றி தெரிவித்தார். இதில் கூட்டுறவு சங்க தலைவர்கள் பாரதிராஜன், தமிழரசன் மற்றும் அனைத்து துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.