மணல் கடத்திய டிராக்டர் பறிமுதல்

மணல் கடத்திய டிராக்டர் பறிமுதல் செய்யப்பட்டது.

Update: 2021-06-21 19:39 GMT
பேரையூர்,ஜூன்.
டி.கல்லுப்பட்டி அருகே மதிப்பனூர் பெரிய ஓடையில் திருட்டுத்தனமாக மணல் அள்ளப்படுவதாக நாகையாபுரம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதைத் தொடர்ந்து போலீசார் அப்பகுதிக்கு சென்று கண்காணித்தனர். அப்போது பெரிய ஓடையில் இருந்து ஒரு டிராக்டரில் மணல் அள்ளி கொண்டுவரும்போது போலீசாரை பார்த்தவுடன் டிராக்டரை டிரைவர் அங்கேயே நிறுத்திவிட்டு தப்பி ஓடிவிட்டார்.
உடனே போலீசார் டிராக்டரை பறிமுதல் செய்து நாகையாபுரம் போலீஸ் நிலையம் கொண்டு வந்தனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்து தப்பி ஓடிய மதிப்பனூரை சேர்ந்த ஒச்சு என்பவரை தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்