அரசுப்பள்ளி ஆசிரியர் தற்கொலை
அரசுப்பள்ளி ஆசிரியர் தற்கொலை செய்து கொண்டார்.
பேரையூர்,ஜூன்.
பேரையூரை சேர்ந்தவர் தினேஷ்குமார் (வயது 38). இவர் பேரையூர் தாலுகா, துள்ளுக்குட்டிநாயக்கனூரில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் பட்டதாரி ஆசிரியராக பணிபுரிந்து வந்தார். இந்த நிலையில் தினேஷ்குமார் உடல்நிலை சரியில்லாமல் கடந்த வாரம் மதுரை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய பிறகும் ஆசிரியர் தினேஷ்குமார் வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனால் வாழ்க்கையில் விரக்தி அடைந்த அவர் விஷ மாத்திரையை தின்றுள்ளார். பின்னர் மதுரை தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இது குறித்து பேரையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.