உடுமலை தாலுகா அலுவலகம், ஊராட்சி ஒன்றிய அலுவலகம் மற்றும் ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் கலெக்டர் எஸ்.வினீத் பதிவேடுகளை ஆய்வு மேற்கொண்டார்.
உடுமலை தாலுகா அலுவலகம், ஊராட்சி ஒன்றிய அலுவலகம் மற்றும் ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் கலெக்டர் எஸ்.வினீத் பதிவேடுகளை ஆய்வு மேற்கொண்டார்.;
உடுமலை,
உடுமலை தாலுகா அலுவலகம், ஊராட்சி ஒன்றிய அலுவலகம் மற்றும் ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் கலெக்டர் எஸ்.வினீத் பதிவேடுகளை ஆய்வு மேற்கொண்டார்.
கலெக்டர் எஸ்.வினீத்
திருப்பூர் மாவட்ட கலெக்டர் எஸ்.வினீத் நேற்று உடுமலைக்கு வந்திருந்தார். அவர் தாலுகா அலுவலகம் மற்றும் உடுமலை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பராமரிக்கப்பட்டு வரும் பதிவேடுகளை ஆய்வு மேற்கொண்டனர்.
இதைத்தொடர்ந்து உடுமலை ஊராட்சி ஒன்றியத்தில் பள்ளபாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மற்றும் ஜல்லிபட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் பழுதடைந்த நிலையில் உள்ள கட்டிடங்களை பார்வையிட்ட கலெக்டர் அவற்றை பராமரிப்பு செய்யவும், மாணவர்களுக்கான கழிவறைகள், குடிநீர் வசதி, மற்றும் வகுப்பறைகளில் பராமரிப்பு பணிகள் போன்ற அடிப்படை வசதிகளை மேற்கொள்ளவும் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கினார்.
மளிகைப்பொருட்கள் தொகுப்பு
இதைத்தொடர்ந்து பள்ளபாளையம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க ரேஷன்கடையில் பொதுமக்களுக்கு, பொது வினியோகத்திட்டத்தின் கீழ் வினியோகிக்கப்படும் அரிசி, கோதுமை, பாமாயில், துவரம்பருப்பு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் தரத்தை ஆய்வு செய்தார். அத்துடன் கொரோனா நிவாரணத்தொகை ரூ.2 ஆயிரம் மற்றும்கொரோனா நிவாரணப்பொருட்களாக 14வகை மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்பை பயனாளிகளுக்கு வழங்கினார்.
பின்னர் தளி பேரூராட்சி அலுவலகத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களுக்கு தேவைப்படும் குடிநீர் சீராக வினியோகம் செய்யபட்டுவருவதை ஆய்வு செய்தார்.
இந்த ஆய்வுகளின்போது உடுமலை ஆர்.டி.ஓ.கீதா, தாசில்தார் வி.ராமலிங்கம், குடிமைப்பொருள் தனிதாசில்தார் தயானந்தன், சமூக பாதுகாப்பு திட்ட தனிதாசில்தார் கார்த்திகேயன், ஆர்.டி.ஓ.வின் நேர்முக உதவியாளர் விவேகானந்தன், உடுமலை ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் சுப்பிரமணியம், வட்டாரவளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சிகள்) ஜெயக்குமார் உள்ளிட்ட அரசு துறை அதிகாரிகள் உடனிருந்தனர்.