விவசாய தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
விவசாய தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
குளித்தலை
குளித்தலை வட்டாட்சியர் அலுவலகம் முன்பு நேற்று காலை அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கம் மற்றும் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு விவசாய தொழிலாளர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் முத்துச்செல்வன் தலைமை தாங்கினார். இதில், சங்க நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர். மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் வேலை வழங்குவதையும், கூலி வழங்குவதையும் சாதி ரீதியாகப் பிரிப்பது சமூகத்தில் மேலும் பிரச்சினைகளை உருவாக்கும் நடவடிக்கையாகும். சாதி வாரியாகப் பிரிக்க முயற்சிக்கும் மத்திய அரசின் முடிவை திரும்பப்பெறக் கோரியும், இத்திட்டத்தை 200 நாட்களாக வேலை வழங்கவும், தினக்கூலியாக ரூ.600 வழங்கக்கோரி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.