ஊட்டியில் குடியிருப்பு பகுதிக்குள் சிறுத்தை நடமாட்டம்

ஊட்டியில் குடியிருப்பு பகுதிக்குள் சிறுத்தை நடமாட்டம் உள்ளது.

Update: 2021-06-21 18:26 GMT
ஊட்டி,

ஊட்டி நகரை சுற்றி தொட்டபெட்டா, தலைகுந்தா உள்ளிட்ட அடர்ந்த வனப்பகுதிகள் உள்ளது. இங்கு சிறுத்தை, கடமான், காட்டெருமை உள்ளிட்ட பல்வேறு வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன. 

இந்த நிலையில் ஊட்டி எச்.பி.எப். பகுதியில் 200-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த குடியிருப்பு பகுதிக்குள் வனப்பகுதியில் இருந்து வெளியேறி சிறுத்தை ஒன்று நடமாடி வருகிறது. இந்த காட்சி ஒரு வீட்டின் கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ளது. இதனால் அந்த பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் அச்சமடைந்து உள்ளனர். 

மேலும் சாலையில் சுற்றித்திரியும் தெருநாய்களை சிறுத்தை அடித்து கொல்லும் அபாயம் உள்ளது. எனவே, வனத்துறையினர் சிறுத்தை நடமாட்டத்தை கண்காணித்து அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

மேலும் செய்திகள்