கூடலூரில் 176 மதுபாட்டில்கள் பறிமுதல் 2 பேர் கைது

கூடலூரில் தேயிலை தோட்டத்தில் பதுக்கி வைத்திருந்த 176 மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்து, 2 பேரை கைது செய்தனர்.

Update: 2021-06-21 18:18 GMT
கூடலூர்

கூடலூரில் தேயிலை தோட்டத்தில் பதுக்கி வைத்திருந்த 176 மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்து, 2 பேரை கைது செய்தனர். மேலும் தலைமறைவான அ.தி.மு.க. பிரமுகரை வலைவீசி தேடி வருகின்றனர்.

போலீசார் சோதனை

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இதில், கோவை, நீலகிரி உள்பட 11 மாவட்டங்களில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படவில்லை. இதனால் கூடலூர் பகுதியில் கர்நாடகா மாநில மதுபாட்டில்களை கடத்தி வந்து விற்பனை செய்வதாக புகார் வந்தது. 

இதையடுத்து கர்நாடக-கூடலூர் எல்லையில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் கூடலூர் பகுதியில் மதுபாட்டில்கள் விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. 

இதையடுத்து கூடலூர் 2-ம் மைல் பகுதியில் ஒரு தேயிலை தோட்டத்தில் போலீசார் திடீர் சோதனை செய்தனர். அப்போது அங்கு மதுபாட்டில்களை பதுக்கி வைத்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

176 மதுபாட்டில்கள் பறிமுதல்

இதைத்தொடர்ந்து அங்கு பதுக்கி வைத்திருந்த 176 மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக அந்த பகுதியை சேர்ந்த 2 பேரை சந்தேகத்தின்பேரில் பிடித்து விசாரணை நடத்தினர்.

இதில் அவர்கள் அதே பகுதியைச் சேர்ந்த வேலுச்சாமி மகன் புஷ்பஅருண் (வயது 36), ஓவேலி காந்திபுரத்தை சேர்ந்த பிரபாகரன் (34) என்பதும், கர்நாடகாவில் இருந்து மதுபாட்டில்களை கடத்தி வந்து தேயிலை தோட்டத்தில் பதுக்கி வைத்து விற்பனை செய்தும் தெரியவந்தது.

2 பேர் கைது

இதையடுத்து புஷ்பஅருண், பிரபாகரன் ஆகியோரை கூடலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் அருள் கைது செய்தார். பின்னர் போலீசார் அவர்களை கூடலூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

மேலும் இந்த சம்பவத்தில் புஷ்ண அருண் அண்ணனும், அ.தி.மு.க. மாவட்ட இளைஞரணி நிர்வாகியுமான விமலநாதன் (38) என்பவருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது. அவர் மீது போலீசர் வழக்குப்பதிவு செய்தனர்.

 இதற்கிடையில் தன்னை போலீஸ் தேடுவதை அறிந்த அவர் தலைமறைவானார். அவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்