நல்லம்பள்ளி அருகே காரில் கடத்திய 200 மதுபாட்டில்கள் பறிமுதல்
நல்லம்பள்ளி அருகே காரில் கடத்திய 200 மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
நல்லம்பள்ளி:
அதியமான்கோட்டை அருகே உள்ள வடக்கு தெருகொட்டாவூர் பகுதியில் நேற்று போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த காரை நிறுத்தி போலீசார் சோதனை செய்தனர். காரில் மதுபாட்டில்கள் இருப்பது தெரியவந்தது. இது குறித்து காரை ஓட்டி வந்த நபரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது அவர் தர்மபுரி இலக்கியம்பட்டியை சேர்ந்த குமரேசன்(வயது31) என்பதும், டாஸ்மாக் கடையில் மதுபாட்டில்களை வாங்கி கடத்தி சென்றதும் தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர். மேலும் கார் மற்றும் 200 மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.