தர்மபுரியில் என்ஜினீயரிங் மாணவர் தற்கொலை

தர்மபுரியில் என்ஜினீயரிங் மாணவர் தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2021-06-21 17:51 GMT
தர்மபுரி:
தர்மபுரியை சேர்ந்தவர் தருண்குமார் (வயது 20). என்ஜினீயரிங் கல்லூரி மாணவரான இவர் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுபற்றி தகவல் அறிந்த தர்மபுரி டவுன் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தர்மபுரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில் செல்போனில் ஆன்லைன் வகுப்பில் கவனம் செலுத்துமாறு பெற்றோர் அறிவுறுத்தியதால் மாணவர் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.  போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்