வயலில் இறங்கி கருப்புக்கொடி ஏந்தி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

மேகதாதுவில் அணை கட்டும் முயற்சியை கைவிடக்கோரி வயலில் இறங்கி கருப்புக்கொடி ஏந்தி விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2021-06-21 17:47 GMT
கொள்ளிடம்:
மேகதாதுவில் அணை கட்டும் முயற்சியை கைவிடக்கோரி வயலில் இறங்கி கருப்புக்கொடி ஏந்தி விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 
கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம்
கர்நாடக மாநிலம் மேகதாதுவில் அணை கட்டும் முயற்சியை கைவிடக்கோரி மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே மகேந்திரபள்ளி கிராமத்தில் தமிழக காவிரி விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் விஸ்வநாதன் தலைமையில் வயலில் இறங்கி கருப்புக்கொடி ஏந்தி விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்பாட்டத்தில் விவசாயிகள் வைத்திலிங்கம், மூர்த்தி மற்றும் பலர் கலந்து கொண்டு மேகதாதுவில் அணை கட்டும் முயற்சியை கைவிடக்கோரி கோஷங்கள் எழுப்பினர். . 
கோஷங்கள் 
இதேபோல் பனங்குடி கிராமத்தில் காவிரி விவசாயிகள் சங்க மாவட்ட துணை தலைவர் பன்னீர்செல்வம் தலைமையிலும, புளியந்துறை கிராமத்தில் வெங்கடேசன் தலைமையிலும், மாதானம் கிராமத்தில் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் முருகன் தலைமையிலும், ஆரப்பள்ளம் கிராமத்தில் விவசாய சங்க பொருளாளர் பாஸ்கரன் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் விவசாயிகள் கருப்புக்கொடி ஏந்தி மேகதாதுவில் அணை கட்டும் முயற்சிக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர். 

மேலும் செய்திகள்