விருத்தாசலம் புறவழிச்சாலையில் தீ விபத்து மரக்கன்றுகள் எரிந்து சேதம்

விருத்தாசலம் புறவழிச்சாலையில் தீ விபத்து ஏற்பட்டு மரக்கன்றுகள் எரிந்து சேதமானது.

Update: 2021-06-21 17:42 GMT
விருத்தாசலம், 

விருத்தாசலத்தில் புதுக்கூரைப்பேட்டையில் இருந்து மணவாளநல்லூர் வரை சுமார் 9 கி.மீ. தூரம் உள்ள புறவழிச்சாலை உள்ளது. இங்கு சாலையோரம் வனத்துறை மூலமாக மரக்கன்றுகள் நடப்பட்டு, தமிழ்நாடு சாலை மேம்பாட்டு திட்ட அலுவலகத்தின் மூலம் பராமரிக்கப்பட்டு வந்தது. 

அதே நேரத்தில் தற்போது சாலையில் பலர் எள் உள்ளிட்ட தானியங்களை உலர வைத்து வந்தனர். இதில் இருந்து வரும் கழிவுகளை சாலையோரம் குவித்து வைத்திருந்தனர். இவை நேற்று இரவு திடீரென தீ பற்றி எரிந்தது.

 இதில் சாலையோரம் இருந்த ஏராளமான மரக்கன்றுகள் மற்றும் அரசியல் கட்சியினர் அமைத்திருந்த கொடி கம்பங்கள் ஆகியன தீயில் கருகி போனது. தகவல் அறிந்த விருத்தாசலம் தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர்.  

மேலும் செய்திகள்