கொரோனாவுக்கு 3 பேர் பலி

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கொரோனாவுக்கு 3 பேர் பலியாகினர்.

Update: 2021-06-21 17:38 GMT
கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நேற்று கொரோனாவால் 167 பேர் பாதிக்கப்பட்டனர். 258 பேர் சிகிச்சையில் குணமாகி வீடு திரும்பினர். இதுவரை 38 ஆயிரத்து 726 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில், 36 ஆயிரத்து 954 பேர் குணமாகியுள்ளனர். தற்போது ஆயிரத்து 485 பேர் சிகிச்சையில் உள்ளனர். இந்தநிலையில் 2 முதியவர்கள், ஒரு ஆண் சிகிச்சை பலனின்றி இறந்தனர். இதுவரை 287 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர்.

மேலும் செய்திகள்