குளத்தில் மூழ்கி வாலிபர் பலி

குளத்தில் மூழ்கி வாலிபர் பலி;

Update: 2021-06-21 17:22 GMT
புதுக்கோட்டை, ஜூன்.22-
கீரனூர் பகுதியை சேர்ந்தவர் விக்‌னேஷ் (வயது21). இவர் திருக்கோகர்ணம் கம்மாள தெரு அருகே கல்குவாரி குளத்தில் நேற்று குளித்து கொண்டிருந்த போது தண்ணீரில் மூழ்கி இறந்தார். இது குறித்து தகவல் அறிந்ததும் திருக்கோகர்ணம் போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்தனர். இறந்த விக்‌னேஷின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து திருக்கோகர்ணம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்