புதுக்கோட்டை மாவட்டத்தில் கொரோனாவுக்கு மேலும் 6 பேர் பலி

புதுக்கோட்டை மாவட்டத்தில் கொரோனாவுக்கு மேலும் 6 பேர் பலியாகினர்.

Update: 2021-06-21 17:22 GMT
புதுக்கோட்டை, ஜூன்.21-
புதுக்கோட்டை மாவட்டத்தில் கொரோனாவுக்கு மேலும் 6 பேர் பலியாகினர்.
6 பேர் பலி
புதுக்கோட்டை மாவட்டத்தில் கொரோனா தொற்று பரவல் குறைந்திருந்தாலும் இறப்பு விகிதம் அவ்வப்போது உயர்ந்து வருகிறது. அரசால் நேற்று வெளியிடப்பட்டபட்டியலில் புதுக்கோட்டை மாவட்டத்தில் மேலும் 6 பேர் கொரோனாவுக்கு பலியாகியிருந்தனர். இதனால் மாவட்டத்தில் கொரோனாவுக்கு இறப்பு எண்ணிக்கை 293 ஆக உயர்ந்துள்ளது.
மாவட்டத்தில் புதிதாக 86 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி இருந்தது. இதனால் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை மாவட்டத்தில் 26 ஆயிரத்து 278 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்தவர்களில் 174 பேர் டிஸ்சார்ஜ் ஆகினர். இதனால் குணமடைந்தோர் எண்ணிக்கை 25 ஆயிரத்து305 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவுக்கு மாவட்டத்தில் 680 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மேலும் செய்திகள்