தனியார் காற்றாலை நிறுவனத்தை கண்டித்து மணியாச்சியில் கிராம மக்கள் போராட்டம்
மணியாச்சியில் தனியார் காற்றாலை நிறுவனத்தை கண்டித்து கிராம மக்கள் தர்ணா போராட்டம் நடத்தினர்.;
கயத்தாறு:
மணியாச்சியில் தனியார் காற்றாலை நிறுவனத்தை கண்டித்து கிராம மக்கள் தர்ணா போராட்டம் நடத்தினர்.
போராட்டம் குறித்து கிராம மக்கள் கூறுகையில்,‘கயத்தாறு அருகே உள்ள மணியாச்சியில் தனியார் இடத்தில் தனியார் காற்றாலை கம்பெனி அமைப்பதற்கு தங்களிடம் 5 ஏக்கர் நிலம் கிரையம் வாங்கி விட்டு, மீதமுள்ள 8 ஏக்கர் நிலத்தை அபகரித்துவிட்டதாகவும், அதற்கு அருகில் உள்ள குளத்திற்கு தண்ணீர் வரும் வாய்க்கால்கள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு உள்ளது. மேலும் இப்பகுதியில் இடத்தின் அருகில் உள்ள விவசாயிகளுக்கு பல்வேறு இடையூறுகளை செய்து வருவதாகவும் புகார் தெரிவித்தனர். இதை அறிந்த. மணியாச்சி போலீசார் சம்பவ பகுதிக்கு சென்று, போராட்டம் தொடர்பாக 3 பேர் மீது வழக்கு பதிவு செய்ததாக கூறினர். இது குறித்து தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுப்பதாகவும், தொடர்ந்து தங்களுக்கு நீதி கிடைக்கவில்லை என்றால் தொடர் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக கிராம மக்கள் தெரிவித்தனர்.