திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆனி வருஷாபிஷேகம்
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நேற்று ஆனி வருஷாபிஷேகம் நடந்தது.
திருச்செந்தூர்:
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நேற்று ஆனி வருஷாபிஷேகம் நடந்தது. தற்போது கொரோனா தடுப்பு ஊரடங்கால் ஆகமவிதிப்படி நாள்தோறும் பூஜைகள் மட்டும் நடந்து வருகின்றது. ஆனால் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படவில்லை.
வருஷாபிஷேகத்தை முன்னிட்டு நேற்று அதிகாலை 5 மணிக்கு நடைதிறக்கப்பட்டு, 5.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனை, தொடர்ந்து உதயமார்த்தாண்ட அபிஷேகமும் தீபாராதனையும் நடந்தது. பின்னர் பூஜை செய்யப்பட்ட கும்பங்கள் விமான தளத்திற்கு கொண்டுவரப்பட்டு, மூலவர் மற்றும் வள்ளி, தெய்வானை விமான கலசங்களுக்கு போத்தியும், சண்முகர் விமான கலசத்திற்கு சிவாச்சாரியரும், பெருமாள் விமான கலசத்துக்கு பட்டாச்சாரியார்களும் அபிஷேகம் செய்தனர். தொடர்ந்து தீபாராதனை நடந்தது. பின்னர் மூலவர் மற்றும் பரிவாரமூர்த்திகளுக்கு அபிஷேகம் நடந்தது. இந்நிகழ்ச்சியில் பக்தகர்கள் யாரும் கலந்து கொள்ள அனுமதிக்கப்படவில்லை.