ஸ்பிக் நகரில் கொரோனா தடுப்பூசி முகாம்
ஸ்பிக் நகரில் கொரோனா தடுப்பூசி முகாம் நடந்தது.
ஸ்பிக் நகர்:
முள்ளக்காடு அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பாக ஸ்பிக் நகர், வட்டார அனைத்து தொழில் வியாபாரிகள் சங்க உறுப்பினர்கள் மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களுக்கும் கொரோனா தடுப்பூசி போடும் முகாம் நேற்று தவசி பெருமாள் சாலையிலுள்ள வியாபாரிகள் சங்க கட்டிடத்தில் வைத்து நடைபெற்றது. டாக்டர் சந்தனமாரி தடுப்பூசி போடும் நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். இந்த தடுப்பூசி முகாமில் அனைத்து வியாபாரிகள் சங்க உறுப்பினர்களும் குடும்பத்தினருடன் கலந்து கொண்டு தடுப்பூசி போட்டுக் கொண்டனர்.