ஆத்தூர் அருகே சூதாடிய 7 பேர் கைது
ஆத்தூர் அருகே சூதாடிய 7 பேரை போலீசார் கைது செய்தனர்.
ஆறுமுகநேரி:
ஆத்தூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சுந்தர்ராஜ் மற்றும் போலீசார் கொழுவை நல்லூர் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்ட போது அப்பகுதியில் ஒரு வீட்டிற்குள் சிலர் பணம் வைத்து சூதாடுவது தெரியவந்தது.
போலீசார் சுற்றிவளைத்து அவர்களைப் பிடித்து விசாரித்தனர். அதில், அந்த வீட்டின் உரிமையாளர் திருக்குமார், கொழுவை நல்லூர் முத்துக்குமரன், பெருமாள், மோகன்ராஜ், பொன் கந்தன், ஆத்தூரை சேர்ந்த பிலால், அயூப் கான் ஆகிய 7 பேர் என தெரிந்தது. அந்த 7 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து சீட்டுக்கட்டு மட்டும் ரூ.3,400 பறிமுதல் செய்யப்பட்டது.