தூத்துக்குடி பெண் குண்டர் சட்டத்தில் கைது

தூத்துக்குடியில் பெண்களை விபசாரத்தில் ஈடுபடுத்திய பெண் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

Update: 2021-06-21 15:31 GMT
தூத்துக்குடி:
தூத்துக்குடியில் பெண்களை விபசாரத்தில் ஈடுபடுத்திய பெண் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
விபசாரம்
தூத்துக்குடி சங்கராபுரம் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் வைத்து குரூஸ்புரத்தை சேர்ந்த ட்ருமேன் மனைவி ஜூலியட் (வயது 40). இவரும், முத்துகிருஷ்ணாபுரத்தை சேர்ந்த நடராஜன் மகன் கருப்பசாமியும் (38) மதுரை, திருப்பூர், தஞ்சாவூர் பகுதிகளை சேர்ந்த பெண்களுக்கு பணம் தருவதாக ஆசைவார்த்தை கூறி விபசாரத்தில் ஈடுபடுத்தி உள்ளனர். இது குறித்த தகவல் அறிந்த தூத்துக்குடி அனைத்து மகளிர் போலீசார் விரைந்து சென்று பாலியல் தொழிலில் ஈடுபட்ட பெண்களை மீட்டனர். மேலும் ஜூலியட், கருப்பசாமி ஆகிய 2 பேரையும் கைது செய்தனர்.
குண்டர் சட்டம்
தொடர்ந்து ஜூலியட்டை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் பரிந்துரை செய்தார். 
அதன்பேரில் மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ், குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் ஜூலியட்டை கைது செய்ய உத்தரவிட்டார். 
இந்த உத்தரவு நகலை இன்ஸ்பெக்டர் ஜெயந்தி, மதுரை பெண்களுக்கான சிறப்பு ஜெயிலில் வழங்கினார்.

மேலும் செய்திகள்