தேனியில் தீண்டாமை ஒழிப்பு முன்னணியினர் ஆர்ப்பாட்டம்
தேனியில் தீண்டாமை ஒழிப்பு முன்னணியினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.;
தேனி:
தேனி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம், தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி ஆகியவை சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்ட செயலாளர் தர்மர் தலைமை தாங்கினார். விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட தலைவர் தயாளன் முன்னிலை வகித்தார். சி.ஐ.டி.யு. மாவட்ட தலைவர் முருகன், இந்திய மாணவர் சங்க மாவட்ட செயலாளர் நாகராஜன் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தில் ஊதிய செலவினத்தை சாதிவாரியாக பகுப்பாய்வு செய்யும் முறையை கைவிட வேண்டும், இத்திட்டத்தில் பயனாளியாக உள்ள அனைத்து குடும்பங்களுக்கும் ஆண்டுக்கு 200 நாட்கள் வேலை மற்றும் நாள் ஒன்றுக்கு ரூ.600 கூலி வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.