டாஸ்மாக் கடைகளை மூடக்கோரி நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

டாஸ்மாக் கடைகளை மூடக்கோரி நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

Update: 2021-06-21 11:29 GMT

தேனி:
நாம் தமிழர் கட்சி சார்பில் தேனி பழைய பஸ் நிலையம் அருகில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு தேனி கிழக்கு மாவட்ட செயலாளர் ஜெயக்குமார் தலைமை தாங்கினார். மேற்கு மாவட்ட செயலாளர் ஜெயபால் முன்னிலை வகித்தார். சட்டமன்ற தொகுதி செயலாளர்கள் பிரேம்சந்தர், குணசேகரன், ஜெயபிரகாஷ் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தின் போது தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள சூழலில் திறக்கப்பட்ட டாஸ்மாக் கடைகளை மூடக்கோரியும், பெட்ரோல், டீசல் விலை உயர்வை கட்டுப்படுத்தக் கோரியும், மத்திய, மாநில அரசை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பப்பட்டன.


மேலும் செய்திகள்