16வது தமிழக சட்டசபையின் முதல் கூட்டத்தொடர் தொடங்கியது

16வது தமிழக சட்டசபையின் முதல் கூட்டத்தொடர் கலைவாணர் அரங்கில் தொடங்கியது;

Update: 2021-06-21 04:55 GMT
சென்னை,

ஒவ்வொரு ஆண்டும் கூடும் சட்டசபை முதல் கூட்டத்தில் கவர்னர் உரை நிகழ்த்துவது மரபாக இருந்து வருகிறது. அதேபோல், புதிய ஆட்சி பொறுப்பேற்ற பிறகு நடைபெறும் முதல் கூட்டத்திலும் கவர்னர் உரையாற்றி வருகிறார்.

அந்த வகையில், 16-வது சட்டசபை தேர்தலில் தி.மு.க. வெற்றி பெற்று ஆட்சி அமைத்த பிறகு, முதல் சட்டசபை கூட்டம் சென்னை கலைவாணர் அரங்கத்தில் இன்று தொடங்கியது. காலை 10 மணிக்கு தொடங்கிய இந்த கூட்டத்தில், கவர்னர் பன்வாரிலால் புரோகித் உரையாற்றி வருகிறார்.

முதல் 2 நாள் கூட்டத்தில், கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் நடைபெறும். இதில், ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பங்கேற்று பேசுவார்கள். நிறைவு நாளில், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது பதில் உரையை வழங்குவார்.

கொரோனா பரவலுக்கு மத்தியில் சட்டசபை கூட்டம் நடைபெறுவதால், கூட்டத்தில் பங்கேற்கும் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதன் முடிவுகளின் அடிப்படையிலேயே சட்டசபையில் அவர்கள் பங்கேற்கும் வகையில், அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்