ஈரோட்டில் மீன்-இறைச்சி கடைகளில் அலைமோதிய மக்கள் கூட்டம்

ஈரோட்டில் மீன்-இறைச்சி கடைகளில் மக்கள் கூட்டம் அலைமோதியது.

Update: 2021-06-20 21:48 GMT
ஈரோடு
ஈரோடு மாவட்டத்தில் கொரோனா பரவல் காரணமாக தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதில், கோழி, ஆடு, மீன் போன்ற இறைச்சி கடைகள் தனிக்கடையாக இருக்கும் பட்சத்தில் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை நடத்திக்கொள்ளலாம் என அரசு அனுமதி அளித்துள்ளது. இதனால், ஈரோடு மாநகரில் நேற்று இறைச்சி கடைகள் வழக்கம்போல் செயல்பட்டன.
ஈரோடு காவிரி ரோடு மீன் மார்க்கெட் கடைகளிலும், சூரம்பட்டி வலசு, முனிசிபல் காலனி, நாடார் மேடு, பெரிய வலசு உள்ளிட்ட பகுதிகளில் தற்காலிக மீன் கடைகளிலும் நேற்று மக்கள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. இதனால், லோகு, கட்லா, ரூபா, ஜிலேபி உள்ளிட்ட அனைத்து வகை மீன்களும் கிலோவுக்கு ரூ.25 முதல் ரூ.50 வரை விலை உயர்ந்து காணப்பட்டது.
மக்களும் ஆர்வத்துடன் மீன்களை வாங்கி சென்றனர். இதேபோல் இறைச்சி கடைகளிலும் மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தங்களுக்கு தேவையான இறைச்சிகளை வாங்கி சென்றனர். ஈரோடு ஸ்டோனி பாலம் அருகே உள்ள மீன் மார்க்கெட் வழக்கம்போல் மூடப்பட்டு இருந்தது.

மேலும் செய்திகள்