மது விற்ற 31 பேர் கைது; இருசக்கர வாகனங்கள் பறிமுதல்
மது விற்ற 31 பேர் கைது செய்யப்பட்டு இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
அரியலூர்:
அரியலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பெரோஸ் கான் அப்துல்லா உத்தரவின்படி, மதுவிலக்கு அமலாக்க பிரிவு கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு திருமேனி தலைமையில் போலீசார் நேற்று ரோந்து சென்றனர். அப்போது மாவட்டங்களில் பல்வேறு இடங்களில் சட்ட விரோதமாக அரசு மது பாட்டில்களை பதுக்கி கூடுதல் விலைக்கு விற்பனை செய்து கொண்டிருந்த 31 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்த மது பாட்டில்கள், 3 இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்த போலீசார், மது பாட்டில்களை மட்டும் அழித்தனர்.