மோட்டார் சைக்கிளில் சுற்றியவர்களுக்கு கொரோனா பரிசோதனை
நெல்லையில் மோட்டார் சைக்கிளில் சுற்றியவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.
நெல்லை:
கொரோனா பரவலை தடுப்பதற்காக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. ஊரடங்கை அமல்படுத்தி உள்ளது. இந்த நிலையில் இ-பதிவு இல்லாமல் நேற்று நெல்லை மாநகர பகுதிகளில் வாகனங்களில் சென்றவர்களை போலீசார் பிடித்து அபராதம் விதித்தனர்.
மேலும் மோட்டார்சைக்கிள், கார் உள்ளிட்ட வாகனங்களில் தேவையில்லாமல் சுற்றித்திரிந்த நபர்களை போலீசார் பிடித்து அவர்களுக்கு கொரோனோ பரிசோதனை செய்யப்பட்டது.
நெல்லை வண்ணார்பேட்டை, சந்திப்பு பகுதிகளில் மோட்டார் சைக்கிளில் வந்த 50-க்கும் மேற்பட்டோரை பிடித்து அவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. மேலும் அபராதமும் விதிக்கப்பட்டது.