பேக்கரி கடைக்கு ‘சீல்’
வெம்பக்கோட்டையில் ஊரடங்கு விதிகளை மீறிய பேக்கரி கடைக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர்.
தாயில்பட்டி,
வெம்பக்கோட்டையில் உள்ள ஒரு பேக்கரி கடை அரசு அனுமதித்த நேரத்தை விட கூடுதலாக திறந்து வைத்து வியாபாரம் செய்து வந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த வெம்பக்கோட்டை வருவாய் ஆய்வாளர் ராமலட்சுமி அந்த பகுதிக்கு சென்றார். அப்போது ஊரடங்கு விதிகளை மீறிய அனுமதிக்கப்பட்ட நேரத்தை விட கூடுதலான நேரம் கடை திறந்து இருந்தது தெரியவந்தது. இதையடுத்து அந்த கடைக்கு ‘சீல்’ வைக்க அவர் உத்தரவிட்டார். அதன்பேரில் கடைக்கு ‘சீல்’ வைக்கப்பட்டது.