350 பேருக்கு கொரோனா தடுப்பூசி

தாயில்பட்டி அருகே முகாமில் 350 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது.

Update: 2021-06-20 19:21 GMT
தாயில்பட்டி, 
மேலதாயில்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது. முகாமிற்கு தாயில்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் விஜயலட்சுமி சந்தானம் தலைமை வகித்தார். தி.மு.க. மேற்கு ஒன்றிய செயலாளர் எதிர் கோட்டை ஜெயபாண்டியன் முகாமினை தொடங்கி வைத்தார். ம.தி.மு.க. ஒன்றிய செயலாளர் ரவி சங்கர், முன்னாள் மாவட்ட கவுன்சிலர் தாமோதரக்கண்ணன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். 
தாயில்பட்டி ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலர் செந்தட்டி காளை தலைமையில் 350 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது.

மேலும் செய்திகள்