சோப்பு நிறுவனத்தில் திருடிய 3 பேர் கைது
சோப்பு நிறுவனத்தில் திருடிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
சோப்பு நிறுவனத்தில் திருடிய 3 பேர் கைது
துறையூர், ஜூன்.21-
துறையூரில் சில நாட்களுக்கு முன்பு முசிறி பிரிவு ரோடு அருகில் உள்ள சோப்பு நிறுவனத்தில் தளவாட சாமான்கள் திருட்டு போனது. இதுதொடர்பாக துறையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை தேடி வந்தார்கள். இந்தநிலையில் நேற்று துறையூரில் உள்ள முசிறி பிரிவு ரோடு அருகில் போலீசார் வாகன சோதனை செய்து கொண்டிருந்த போது, சந்தேகத்துக்கு இடமான வகையில் மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினார்கள். விசாரணையில் அவர்கள் சிங்களாந்தபுரம் கிராமத்தைசேர்ந்த மோகன் (வயது 35), ராஜதுரை (27), விக்னேஷ் (19) என்பதும், சோப்பு நிறுவனத்தில் திருடியதும் தெரியவந்தது. இதையடுத்து 3 பேரையும் கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்து ரூ.50 ஆயிரம் மற்றும் மோட்டார், 30 கிலோ ஸ்குரு, சாக்கு தைக்கும் தையல் எந்திரம் ஆகியவை மீட்டனர்.